Wednesday, October 11, 2017

வேர்க்கடலை கார முறுக்கு

வேர்க்கடலை சேர்த்து செய்யும் இந்த கார முறுக்கு, மிகவும் கரகரப்பாகவும், வாசனையாகவும் இருக்கும்.
நான் இதே போல, முந்திரி முறுக்கு முன்பு செய்துள்ளேன். அதே போல இம்முறை வேர்க்கடலை உபயோகித்து செய்துபாக்கலாம் என நினைத்து செய்தேன். மிகவும் கரகரப்பாக இருந்தது. இங்கே நான் வறுத்த, தோல் நீக்கிய வேர்க்கடலை உபயோகித்துள்ளேன். பச்சை வேர்க்கடலை உபயோகித்தும் செய்யலாம் என நினைக்கிறேன். அடுத்த முறை அப்படி முயற்சித்துப் பார்க்கவேண்டும்.


தேவையான பொருட்கள் 

வேர்க்கடலை – 1/4 கப்
அரிசி மாவு – 1 கப்
சிகப்பு மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
எள் – 1 தேக்கரண்டி
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
வெண்ணெய் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

வேர்க்கடலை கார முறுக்கு செய்முறை

  1. வேர்க்கடலையை முதலில் நன்கு மிக்சியில் பொடி செய்து, பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து வழுவழுப்பாக அரைக்கவும்.peanut-murukku-1
  2. வாயகன்ற பாத்திரத்தில், அரிசி மாவு, அரைத்த விழுது, மிளகாய்த் தூள், எள், பெருங்காயம், வெண்ணெய் (இளகிய நிலையில்) சேர்த்து முதலில் நன்கு கலக்கவும்.peanut-murukku-2
  3. பிறகு, தேவையான தண்ணீர் தெளித்து, மாவாகப் பிசையவும். முறுக்கு அச்சில், மாவை நிரப்பி, எண்ணெய்யில் நேராக முறுக்கு பிழியலாம். அல்லது, சில தட்டையான கரண்டிகளில் எண்ணெய் தடவி, அதன் மேல் அழகாகப் பிழிந்தும் எண்ணெய்யில் போடலாம்.Peanut-murukku-3
  4. இடையே திருப்பி போட்டு, சத்தம் அடங்கியதும் எடுத்து விடவும்.peanut-murukku-4

குறிப்புக்கள் 

  • நான் இங்கே வறுத்த வேர்க்கடலை உபயோகித்துள்ளேன். 1/4 கப் கோபுரமாக அளந்து கொள்ளலாம்.
  • வெண்ணெய் தேக்கரண்டிக்கு மேல் பயன் படுத்த வேண்டாம்.
  • எண்ணெய் சூடாக இல்லை என்றால் முறுக்கு எண்ணெய்யில் பிரிந்துவிடும். அதனால்முறுக்கு பிழியும் பொழுது எண்ணெய் சூடாக இருக்க வேண்டும். வேகும் பொழுது அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். 

No comments:

Post a Comment