Thursday, October 12, 2017

கொள்ளு சுண்டல், KOLLU SUNDAL

3-kollu-sundal

சத்தான சுவையான கொள்ளு சுண்டல் எப்படி செய்வது என்று பாப்போம். சுண்டல் போடி சேர்ப்பதால் சுவையும் மனமும் கூடும். ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன்.

தேவையான பொருட்கள்

கொள்ளு – 1/2 கப்
தேங்காய் துருவல் – 2 மேஜைக்கரண்டி
கொத்தமல்லி இலை – 2 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

வறுத்து பொடி செய்ய

கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
தனியா – 1 தேக்கரண்டி
சிகப்பு மிளகாய் – 4

தாளிக்க

எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் –  2 சிட்டிகை
கருவேப்பிலை – 1 கொத்து

செய்முறை

1. கொள்ளை முதல் நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள், தண்ணீரை வடித்து, வேறு தண்ணீர் கொள்ளு மூழ்கும் அளவிற்கு சேர்க்கவும். அதனுடன் உப்பு சேர்த்து, குக்கரில் 3 விசில் வரும் வரை, மிதமான தீயில் வேக வைக்கவும்.1-cook-roast
2. வறுத்து போடி செய்ய தேவையான பொருட்களை, 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, கடாயில் பொன்னிறமாக வறுத்து, ஆரிய பின் போடி செய்து வைத்துக்கொள்ளவும்.2-powder
3. கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து, வேகவைத்த கொள்ளினை தண்ணீர் வடித்து சேர்க்கவும். ஒரு நிமிடம் வதக்கி, பொடித்த பொடியை தூவி, குறைந்த தீயில் பிரட்டவும்.4-add
4. நறுக்கிய கொத்தமல்லி, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.5-readyகுறிப்பு:
** கொள்ளு வேகவைத்த தண்ணீரை வீணாக்காமல் சாம்பாரிலோ, ரசதிலோ சிறிது சேர்த்துக்கொள்ளலாம்.

1 comment:

  1. Its a Delicious snack item i love to eat this Kollu sundal and Corn Kabab since my childhood.

    ReplyDelete