Wednesday, October 11, 2017

மாங்காய் பச்சடி, MANGO PACHADI

மாங்காய் பச்சடி செய்வது மிகவும் எளிது. தமிழ் வருடப்பிறப்பு அன்று செய்யக்கூடிய முக்கியமான ஒன்று. இதில்,
  1. இனிப்பு) – வெல்லம்
  2. உவர்ப்பு – உப்பு
  3. காரம் – மிளகாய்
  4. புளிப்பு – மாங்காய்
  5. கசப்பு – வேப்பம்பூ
  6. துவர்ப்பு – மாங்காய்/ மஞ்சள் தூள்
ஆகிய ஆறு சுவை உண்டு. இதனை தமிழ் வருடப்பிறப்பு அன்று செய்து  அறுசுவையும் சாப்பிடுவது, வாழ்வின் குணங்களை  சமமாக  எதிர்கொள்ளவேண்டும் என்பதை உணர்த்தவே ஆகும்.


மாங்காய் பச்சடி செய்ய தேவையான பொருட்கள்

மாங்காய், செதுக்கியது (தோல் நீக்கியது) – 1 & 1/2 கப்
வெல்லம் – 1/4 கப் + தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் – 1
தேங்காய் – 1/4 கப்
உப்பு – 1 சிட்டிகை
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

தாளிக்க

எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கருவேப்பிலை – 1 ஆர்க்கு
வெப்பம் பூ – 1 தேக்கரண்டி

மாங்காய் பச்சடி செய்வது எப்படி?

  1. ஒரு அடி கனமான பாத்திரத்தில், தண்ணீர் போதிய அளவு கொதிக்க வைத்து, அதில் மாங்காய் துண்டுகளை போட்டுHow to make mango pachadi1
  2. கொதித்தவுடன், அந்த தண்ணீரை வடிக்கவும். (புளிப்பு அதிகமாக இருந்தால். இல்லாவிடில் அப்படியேவும் வேக வைக்கலாம். (தண்ணீர் அளவு மிகவும் குறைத்து வைக்க வேண்டும்.How to make mango pachadi1a
  3. உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு மிருதுவாக வெந்தவுடன், வெல்லம் சேர்க்கவும். How to make mango pachadi2
  4. வெல்லத்தை, பொடி செய்து அப்படியேவோ அல்லது பாகு காய்ச்சி வடிகட்டியோ சேர்க்கலாம். தண்ணீர் மிகவும் குறைவாக சேர்க்கவும்.How to make mango pachadi3
  5. தேங்காயை அரைத்து, பச்சடியில் சேர்த்து கொதிக்க விடவும்.How to make mango pachadi3a
  6. அடுப்பை அணைத்துவிட்டு, தாளிக்க வேண்டிய பொருட்களை முறையே சேர்த்து, தாளித்து, கலக்கவும்.How to make mango pachadi4a

குறிப்பு

  • மாங்காய் வெந்தவுடன் எளிதில் அடி பிடிக்க வாய்ப்புள்ளது. அதனால் குறைந்த தீயிலே பச்சடியை செய்யவும்.
  • மாங்காயின் புளிப்பிற்கு தகுந்தாற்போல், வெல்லம் அளவு மாறும்.
சாம்பார் சாதத்துடனும், வற்றல்/ புளி குழம்புடனும் நன்றாக இருக்கும்.
பூரியுடனும் நன்றாக இருக்கும்.

No comments:

Post a Comment