
பருப்பு வடை, கடலை பருப்பு மற்றும் சிறிது உளுத்தம் பருப்பும் சேர்த்து செய்யும் ஒரு சிற்றுண்டி. மிகச்சில பொருட்களுடன், மொறுமொறுப்பாகவும், வாசனையாகவும் இருக்கும். என் அம்மாவும் , மாமியும் பருப்பு வடை இப்படித்தான் செய்வார்கள். இதில், மசாலா பொருட்களோ, இஞ்சி பூண்டு விழுதோ அல்லது பெருஞ்சீரகம் எதுவுமே சேர்க்காமல் செய்வார்கள். எனினும் மிகவும் வாசனையாக இருக்கும், பெருங்காயம் சேர்ப்பதால் இதன் வாசனை வித்தியாசமாகவும் இருக்கும்.
பருப்பு வடை செய்ய என்ன தேவை?
கடலை பருப்பு – 1/2 கப்
உளுத்தம் பருப்பு – 1 மேஜைக்கரண்டி
சிகப்பு மிளகாய் – 4
வெங்காயம் – 1
பெருங்காயம் – 1/8 தேக்கரண்டி
ஜீரகம் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
கருவேப்பிலை – ஒரு ஆர்க்கு
பொடியாக நறுக்கியா கேரட் – 2 மேஜைக்கரண்டி (வேண்டுமென்றால் சேர்த்துக்கொள்ளலாம்)
* வெங்காயம் சேர்க்காமலும் இந்த வடையை செய்யலாம்.
பருப்பு வடை எப்படி செய்வது?
- இரண்டு பருப்பையும் கழுவி, 3 மணிநேரம் குறைந்தது ஊற வைக்கவும்.
- தண்ணீரை வடித்து, முதலில் மிக்சியில் உப்பு, மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
- பிறகு பருப்பை சேர்த்து, ஓரிரு தடம் மிக்சியை சுற்றவிடவும். ஓரங்களை வழித்துவிட்டு, நிறுத்தி நிறுத்தி 3-4 முறை அரைக்கவும். (தண்ணீர் சேர்க்க வேண்டாம்)
- கரகரப்பாக அரைத்த பருப்பு பொடியாக நறுக்கிய வெங்காயம், காரட், பெருங்காயம், உப்பு, கிரகம், கருவேப்பில்லை அனைத்தையும் சேர்த்து கலக்கவும்.
- கைகளை தண்ணீரில் ஒவ்வொரு முறையும் நனைத்து, சிறி உருண்டைகளாக உருட்டி , லேசாக தட்டவும்.
- தட்டிய வடையை, சூடான எண்ணெய்யில் கவனமாக போவும். பொரித்து எடுக்கவும்.
- இரு புறமும் பொன்னிறமாக வெந்தவுடன் கிட்சன் டிஷுயூவில் எடுத்து வைக்கவும்.
உங்கள் கவனத்திற்கு
- பருப்புகளை குறைந்தது 3 மணி நேரம் ஊறவைத்தால் தான் வடை மொறு மொறுப்பாக இருந்தாலும் அழுத்தமாக இருக்காது.
- மிகவும் நைஸாகவோ அல்லது முழு பருப்புகள் நிறைய இருக்கவும் கூடாது.
- இதே வடையில் முட்டைகோஸ், பட்டாணி சேர்த்து செய்தல் இன்னும் சுவையாகவும், சாதனதாகவும் இருக்கும்.
These were really good. Will definitely make them and I have seen Corn Kebab Recipe which is similar to this. Thank you for sharing this recipe.
ReplyDelete