Thursday, October 12, 2017

புளி அவல் | PULI AVAL

4-poha

தேவையான பொருட்கள்

கெட்டி அவல் – 1 கப்
புளி  – பெரிய நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி
தாளிக்க
நல்லெண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
கடுகு – 3/4 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1 மேஜைக்கரண்டி
வேர்கடலை – 2 மேஜைக்கரண்டி
சிகப்பு மிளகாய் – 3
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
கருவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

  1. சூடான தண்ணீரில், புளியை  ஊறவைத்து, கரைத்து, புலி கரைசல் எடுத்து வைத்துக்கொள்ளவும்.  அவலை நன்கு அலசி, அதில் புலி கரைசல், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.8248555817_04793206ec_o8248555679_3cf6b0c02d_o
  2. ஒரு கடாயில்  எண்ணெய் சேர்த்து, தளிக்க வேண்டிய பொருட்கள் ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்கவும். ஊறிய அவலை அதில் சேர்க்கவும்.3-aval
  3. ஒரு நிமிடம் வதக்கி, நன்கு சமன்படுத்தி மூடி வைத்து, குறைந்த தீயில் 5 நிமிடங்கள் வேக வைக்கவும். நல்லெண்ணெய் சேர்த்து கலக்கவும்.4-poha

குறிப்பு

  • புளி தண்ணீர் சூடாக இருந்தால், அவல் விரைவாக ஊறி விடும்.

No comments:

Post a Comment