Wednesday, October 11, 2017

தேங்காய் பாயசம், THENGAI PAYASAM


தேங்காய் பாயசம், பண்டிகை நாட்களில் செய்யும் வழக்கம் எங்கள் வீட்டில் உண்டு. இந்த பாயசத்தில் தேங்காய் நிறைய அரைத்து, அதனுடன் சிறிதளவு அரிசியும் சேர்த்து, வெல்ல பாகு காய்ச்சி, பாயசம் செய்வது வழக்கம். வெல்லத்தில் அசுத்தம் இல்லாவிடில், அப்படியே சேர்த்தும் செய்யலாம். இந்த பாயசம் முதன் முதலில் நான் என் பெரியம்மா வீட்டில் தான் ருசித்தேன்.
தேங்காய் பாயசம்
தேவையான பொருட்கள்
துருவிய தேங்காய் – 3/4 கப்
பச்சரிசி – 3 மேஜைக்கரண்டி
வெல்லம் – 3/4 கப்
ஏலக்காய் – 1
முந்திரி – 8
நெய் – 1 மேஜைக்கரண்டி
செய்முறை
  1. அரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும். துருவிய தேங்காய், அரிசி, 1/4 கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.1-thenga-payasam
  2. அதில், 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இடையிடையே நன்கு கிளறிவிடவும்.2-thengai-payasam
  3. வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து சூடு செய்து, கரைக்கவும். வடிகட்டியில் வடிகட்டவும்.3-thengai-payasam
  4. இதனை அரிசி தேங்காயுடன் சேர்த்து, குறைந்த தீயில் கலக்கவும்.
    இதில் முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.5-thengai-payasam
குறிப்பு
  • அரிசியின் அளவைப்பொறுத்து, பாயசம் கெட்டியாக இருக்கும்.
    இதில், ஆரிய பின், காய்ச்சிய பால் சேர்க்கலாம்.

No comments:

Post a Comment