ஜவ்வரிசி வடை செய்முறை ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன். நார்த் இந்தியன் வகை சாபுதானா வடை. உருளைக்கிழங்கு, வேர்க்கடலை மற்றும்எலுமிச்சை சேர்த்து செய்யும் வடை. மிகவும் சியான சிற்றுண்டி. பொதுவாக நவராத்ரி நாட்களில் நார்த் இந்தியன் வீடுகளில் விரதத்தின் பொழுது இதை செய்வார்கள். ஆனால் விரதம் இருக்கும் பொழுது அரிசி மாவு சேர்க்க மாட்டார்கள்.
தேவையான பொருட்கள்
ஜவ்வரிசி – 1 கப்
உருளைக்கிழங்கு – 2
வேர்கடலை – 1/4 கப்
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி இலை – 2 மேஜைக்கரண்டி
எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி
அரிசி மாவு – 1 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை
- ஜவ்வரிசியை அலசி, 3 மணி நேரம் ஊற வைக்கவும். உருளைக்கிழங்கை, வேகவைத்து, மசித்துக்கொள்ளவும்.

- வேர்கடலையை மிதமான தீயில் வறுத்து, தோல் நீக்கி, கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும்.

- ஊறிய ஜவ்வரிசியை, தண்ணீரில்லாமல் நன்கு வடித்து, ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கு, வேர்கடலை, பொடியாக அறிந்த பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, எலுமிச்சை சாறு, அரிசி மாவு, உப்பு சேர்த்து, ஒன்றாக பிசைந்து கொள்ளவும்.


- ஒரே அளவு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.

- எண்ணெய்யை காயவைத்து, வடைகளாக தட்டி, 4 அல்லது 5 ஒரே சமயத்தில் பொரிக்கலாம். இருபுறமும் பொன்னிறமாகும் வரை பொறித்து எடுக்கவும்.

குறிப்பு
- ஜவ்வரிசியின் அளவை பொறுத்து, ஊறவைக்கும் நேரம் மாறுபடும். இங்கு நான் கருப்பு மிளகு அளவு ஜவ்வரிசி உபயோகித்து இருக்கிறேன்.
- உருளை கிழங்கு இங்கு நடுத்தர அளவு உபயோகித்து இருக்கிறேன்.

No comments:
Post a Comment