Tuesday, October 10, 2017

அச்சு முறுக்கு, ACHU MURUKKU


Recipe type: Snacks
Cuisine: Indian
Prep time:  
Cook time:  
Total time:  
Serves: 30
அச்சு முறுக்கு அல்லது ரோஸ் குக்கீஸ் எனப்படும் இந்த பலகாரம், நான் சிறு வயதில் சாப்பிட்ட ஒன்று. இதில் பொதுவாக முட்டை சேர்க்கப்படும். ஆனால் முட்டை இல்லாமல், அரிசி மாவு, மைதா மாவு, தேங்காய் பால், சக்கரை மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
Ingredients
  • அரிசி மாவு - 1 கப்
  • மைதா மாவு - ¼ கப்
  • சக்கரை - ¼ கப்
  • தேங்காய் பால் - ¾ கப் + 1 மேஜைக்கரண்டி
  • உப்பு - ⅛ தேக்கரண்டி
  • வெண்ணிலா எசன்ஸ் - ¼ தேக்கரண்டி
Instructions
  1. & ½ கப் துருவிய தேங்காய் பூவை, ½ கப் வெது வெது நீர் சேர்த்து, அரைத்து, ஒரு பெரிய வடிகட்டியில் ஊற்றி, பிழிந்து தேங்காய்ப் பால் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. அரிசி மாவு, மைதா மாவு, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். அதில் சக்கரை, தேங்காய் பால் சேர்த்து கரைக்கவும். எசன்ஸ் சேர்த்து கலக்கவும். தோசை மாவு போல கெட்டியாக கரைக்கவும். மாவு அச்சில் நினைத்து எடுத்தால், சொட்டாமல் இருந்தால் நல்லது.
  3. எண்ணெய் காயவைத்து, அதில் முறுக்கு அச்சை அதில் வைத்து சூடாக்கவும்.
  4. கரைத்த மாவில் அச்சை ¾ பாகம் மட்டும் நனைத்து, சூடான எண்ணெய்யில் விட்டு, லேசாக ஆட்டவும்.
  5. சற்று நொடிகளில் முறுக்கு அச்சிலிருந்து பிரியும். சத்தம் அடங்கும் வரை பொரித்து/ பொன்னிறமானவுடன் எண்ணெயிலிருந்து வடித்து எடுக்கவும். தீ எப்பொழுதும் மிதமாகவே இருக்கட்டும். சூடு குறைந்தால் மட்டும் தீயை அதிகமாக வைக்கவும்.
Notes
அச்சை விட்டு முறுக்கு சிலசமயம் பிரியாது. குறிப்பாக புதிது என்றால். அப்பொழுது, ஒரு போர்க் அல்லது குச்சி வைத்து எடுத்துவிடலாம்.
ஒரே சமயத்தில் 3 வரை பொரிக்கலாம். ஒவ்வொரு முறையும் அச்சை சூடு படுத்திக்கொள்ளவும். 
தேவைக்கு அதிகமாக தேங்காய் பாலோ, சக்கரையோ சேர்க்கவேண்டாம்.
இந்த பலகாரம் செய்ய, பொறுமை மிகவும் அவசியம்.

No comments:

Post a Comment