Thursday, October 12, 2017

காரடையான் நோன்பு அடை

Karadaiyan nombu adai in tamil
காரடையான் நோன்பு பங்குனி மாதம் கொண்டாடப்படும் நோன்பு பண்டிகை. குறிப்பாக பங்குனி மாதம் பிறக்கும் நேரம் பார்த்து நெய்வேத்தியம் செய்வார்கள். இல்லை என்றால் நல்ல நேரம் பார்த்தும் செய்யலாம்.

என்ன தேவை?

பச்சரிசி – 1 & 1/2 கப்

வெல்ல அடை

  • அரிசி மாவு – 1 கப்
  • வெல்லம் – 1 கப்
  • தண்ணீர் – 2 கப்
  • தேங்காய், பற்கள் நறுக்கியது – 4 மேஜைக்கரண்டி
  • காராமணி – 1/4 கப்
  • ஏலக்காய் – 1
உப்பு அடை
  • அரிசி மாவு – 1 கப்
  • தண்ணீர் – 2 கப்
  • தேங்காய், பற்கள் நறுக்கியது – 4 மேஜைக்கரண்டி
  • காராமணி – 1/4 கப்
  • உப்பு – தேவைக்கேற்ப
  • எண்ணெய் – 1 தேக்கரண்டி
  • கடுகு – 1/2 தேக்கரண்டி
  • பெருங்காயம் – 1 சிட்டிகை
  • பச்சை மிளகாய் – 2
  • கருவேப்பிலை – 1 ஆர்க்கு

காரடையான் நோன்பு அடை எப்படி செய்வது ?

  1. அரிசியை 2 மணிநேரம் ஊற வைக்கவும். ஒரு சுத்தமான துணியில் அரிசியை உலர்த்தவும்.How to make karadaiyan nonbu adai 1
  2. கராமணியுடன் இதர நவதானியங்கள் (அரிசி தவிர) சாஸ்திரத்திற்காக என்னுடைய அம்மா சேர்ப்பார். அதை போல நானும் சேர்த்துள்ளேன். இதனை, நன்றாக வாசனை வரும் வரை மிதமான தீயில் வறுக்கவும்.How to make karadaiyan nonbu adai 2
  3. இதனை, தண்ணீரில் ஊறவைக்கவும். How to make karadaiyan nonbu adai 3
  4. அரிசி வளர்ந்திருக்கும். இதனை மிக்சியில் சேர்த்து, மாவாக அரைக்கவும். இந்த அரிசி மாவை சலிக்கவும். மீதமுள்ள கப்பியை, அரிசி அரைக்கும் பொழுது சேர்த்து அரைக்கவும்.How to make karadaiyan nonbu adai 4
  5. சலித்த மாவை அளந்து கொள்ளவும். வெல்லத்தில் தண்ணீர் மூழ்கும் வரை ஊற்றி, வெல்லம் கரையும் வரை சூடு செய்யவும்.How to make karadaiyan nonbu adai 5
  6. வெல்லம் கரைந்ததும், ஒரு வடிகட்டியில் ஊற்றி வடி கட்டவும். பாத்திரத்தை கழுவி மறுபடியும் வெல்ல பாகை சூடு செய்யவும். கொதிக்கும் பாகில் காராமணியை சேர்க்கவும். 2 நிமிடங்கள் கொதிக்க விடவும் . இதில் மாவை சேர்க்கவும்.How to make karadaiyan nonbu adai 6
  7. குறைந்த தீயில், கெட்டியாகும் வரை கிளறவும். தேங்காய் பற்களை சேர்த்து கிளறி, இறக்கி வைக்கவும்.How to make karadaiyan nonbu adai 7
  8. உப்பு அடைக்கு, ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து, கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும். கருவேப்பிலை, பெருங்காயம்,பச்சை மிளகாய்  சேர்த்து, தண்ணீர் , உப்பு  சேர்த்து கொதிக்க விடவும்.  காராமணியை சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விடவும். மாவை கொட்டி, மிதமான தீயில் கிளறவும்.How to make karadaiyan nonbu adai 8
  9. தேங்காய் பற்கள் சேர்த்து, கிளறி, மாவு கெட்டியானவுடன் இறக்கி, மூடிவைக்கவும்.How to make karadaiyan nonbu adai 9
  10. இரெண்டு (இனிப்பு மற்றும் உப்பு) மாவையும் ஆரிய பின், கைகளில் சிறிது எண்ணெய் தொட்டுக்கொண்டு பிசைந்து, சமமான உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.How to make karadaiyan nonbu adai 11
  11. எண்ணெய் தடவிய இட்லி தட்டில் சிறு அடைகளாக தட்டி, நடுவில் ஒரு ஓட்டை ஈட்டி, அடுக்கவும். இட்லி பானையில் வைத்து, 5-8 நிமிடம் வரை வேகவைக்கவும்.How to make karadaiyan nonbu adai 12
உருகாத வெண்ணெயுடன் கடவுளுக்கு நெய்வேத்தியம் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment