Thursday, October 12, 2017

முடக்கத்தான் தோசை, MUDAKATHAN DOSAI

முடக்கத்தான் தோசை
முடக்கத்தான் தோசை, மூட்டு வலிக்கு மிகவும் நல்லது. மேலும் எண்ணற்ற சத்துக்கள் இருக்கும் இந்த முடக்கத்தான் கீரை தோசை செய்யும் முறையை பாப்போம். மிகவும் எளிமையான பொருட்களைக் கொண்டு இந்த தோசையை செய்து விடலாம். மாவை புளிக்க வைப்பதால், அரவும் கசப்பு இருக்காது. பச்சை வாசனை வராமல் இருக்கும், இருந்தாலும் மிகவும் குறைவாகத் தான் இருக்கும். பூண்டு மிளகாய் பொடி  தொட்டு சாப்பிட்டால் அதுவும் தெரியாது.

என்ன தேவை?

இட்லி அரிசி – 2 கப்
முடக்கத்தான் கீரை – 3 கப்
வெந்தயம் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப

முடக்கத்தான் தோசை எப்படி செய்வது?

  1. இட்லி அரிசி, வெந்தயம் இரண்டையும் 3 மணிநேரம் ஊறவைக்கவும். 
  2. முடக்கத்தான் கீரையை காம்பிலிருந்து ஆய்ந்து, சுத்தம் செய்யவும்.
  3. தண்ணீரை வடித்து, மிக்சியில் கீரையை சேர்க்கவும்.
  4. உப்பு, ஊறவைத்த அரிசி, வெந்தயம் சேர்த்து நன்கு நைசாக அரைக்கவும். அரைக்கும் பொழுது தண்ணீர் சிறிது சேர்த்துக்கொள்ளவும்.
  5. 10-12 மணிநேரம் வரை புளிக்க வைக்கவும்.
  6. தோசை ஊற்றும் முன், நன்கு மாவை ஊற்றும் பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும். சூடான தோசைக்கல்லில் ஊற்றி மூடி வேக விடவும். விருப்பப்பட்டால் திருப்பி போட்டு சுடலாம். ஒரு சில சொட்டு நல்லெண்ணெய் ஊற்றி வேகவிடவும்.

உங்கள் கவனத்திற்கு

  • நன்கு புளிதால் தான் தோசை நன்றாக இருக்கும். 
  • வெந்தயம் சேர்க்காவிட்டால் மாவு பொங்காது. 
  • தேவைப்பட்டால் ஒரு பிடி உளுந்து சேர்த்து ஊறவைத்து அரைக்கலாம்.
சூடாக பூண்டு மிளகாய் போடி, தயிர் தொட்டு சாப்பிடவும்.

No comments:

Post a Comment