Thursday, October 12, 2017

கோதுமை ரவா பொங்கல், GODHUMAI RAVA PONGAL

கோதுமை ரவா பொங்கல், மிகவும் சத்தான, சுவையான காலை உணவு.  வெள்ளை ரவாவை விட கோதுமை ரவா சற்று சத்து கூடுதலானது. மிகவும் எளிதில் செய்யக்கூடியது. கோதுமை ரவா, சக்கரை நோயாளிகள் மற்றும் சத்தான உணவு சாப்பிட என்னும் உங்களுக்கு ஏற்றது.
கோதுமை ரவா பொங்கல்
கோதுமை ரவா பொங்கல் செய்வது எப்படி என்று பார்ப்போம் .

என்ன தேவை?

  • கோதுமை ரவை – 1 கப்
  • பயத்தம் பருப்பு (பாசி பருப்பு) – 3 மேஜைக்கரண்டி
  • உப்பு – தேவைக்கேற்ப
  • நெய் – மேலே ஊற்றி பரிமாற

தாளிக்க

  • நெய் – 1 மேஜைக்கரண்டி
  • மிளகு – 1 & 1/2 தேக்கரண்டி
  • ஜீரகம் – 1 தேக்கரண்டி
  • இஞ்சி, மிகவும் பொடியாக நறுக்கியது – 1 மேஜைக்கரண்டி
  • பச்சை மிளகாய் – 2
  • கருவேப்பிலை – 1 ஆர்க்கு
  • பெருங்காயம் – 1/8 தேக்கரண்டி
  • முந்திரிப்பருப்பு – 8

எப்படி செய்வது?

  1. ஒரு சிறிய குக்கரை சூடு செய்து, நெய் ஊற்றி, மிளகு போட்டு, வெடித்ததும் தீயைக்  குறைத்து, சீரகம், இஞ்சி, கருவேப்பிலை, பச்சை மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து, 1/2 நிமிடம் வதக்கவும். முந்திரி சேர்ப்பதானால் மிளகு சேர்த்த பிறகு சேர்க்கவும்.
  2. பயத்தம் பருப்பை சேர்த்து, லேசாக வறுக்கவும்.
  3. இதில் கோதுமை ரவையை சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து, 4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  4. மிதமான தீயில், 4 விசில்கள் வைக்கவும்.
உங்கள் கவனத்திற்கு
  • முந்திரி  என் வீட்டில் யாருக்கும் பிடிக்காது அதனால், நான் இங்கே சேர்க்கவில்லை.
  • தண்ணீர் 3& 1/2 – 4 கப் வரை சேர்க்கலாம்.  தளர வேண்டும் என்றால் 4 கப். 
  • மஞ்சள் தூள் சேர்த்தும் இந்த பொங்கலை செய்யலாம்.
குக்கரை திறந்து, மசித்து, சூடாக மேலே நெய் ஊற்றி பரிமாறவும். தேங்காய் சட்னி இதற்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.

1 comment:

  1. Wheat Rava Pongal is a very Healthy and Diabetic recipe. it contains low calories. Thanks for the sharing this Recipe with us.

    ReplyDelete