Thursday, October 12, 2017

கதம்ப சட்னி, KADAMBA CHUTNEY

கதம்ப சட்னி

கதம்ப சட்னி ஒவ்வொருவர் விருப்பத்திற்கேற்ப செய்து கொள்ளலாம். முக்கியமாக, கொத்தமல்லி, கருவேப்பிலை மற்றும் புதினா சேர்க்கப்படும். மற்றபடி, நம்மிடம் இருக்கும் இதர காய் அல்லது வெங்காயம் தக்காளி சேர்த்து இதனை செய்யலாம். இதனை சில ஆண்டுகளுக்கு முன் என் மாமி செய்த பொழுது எனக்கு அதில் இஞ்சியின் வாசனை பிடிக்கவில்லை. அதனால் இந்த முறை, மிகவும் குறைவாக சேர்த்தேன். ஆனால் அந்த சட்னியில் தனியா வறுத்து சேர்த்திருந்தார் என் மாமி. இது வேறு சுவையாக இருந்தது.

என்ன தேவை?


தேவையான பொருட்கள்
வெங்காயம் – 1
தக்காளி – 1
பூண்டு – 4 பற்கள்
இஞ்சி, நறுக்கியது  – 2 தேக்கரண்டி
கருவேப்பிலை – 2 ஆர்க்கு
புதினா – 3 மேஜைக்கரண்டி
கொத்தமல்லி இலை – 3 மேஜைக்கரண்டி
புளி – 1/2 தேக்கரண்டி
துருவிய தேங்காய் – 1/4 கப்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – 2 தேக்கரண்டி
தாளிக்க
எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 2 தேக்கரண்டி

எப்படி செய்வது?
செய்முறை

  1. வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும். தேவையான எல்லா பொருட்களையும் தயாராக வைக்கவும்.  வாணலியில் எண்ணெய் சேர்த்து, முதலில் சிகப்பு மிளகாயை வறுக்கவும்.கதம்ப சட்னி 1
  2. அதில் வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, புளி சேர்த்து வதக்கவும்.கதம்ப சட்னி
  3. வதங்கிய பின், துருவிய தேங்காய் சேர்க்கவும். ஒரு நிமிடம் வதக்கி, ஆற வைக்கவும்.கதம்ப சட்னி 3
  4. ஆரிய பின், மிக்சியில் அரைக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம். கதம்ப சட்னி 4
  5. கடாயில் எண்ணெய் சேர்த்து, கடுகு ,உளுத்தம் பருப்பு தாளித்து, அரைத்த சட்னியில் கலக்கவும்.கதம்ப சட்னி 5
சூடான இட்லியுடன் பரிமாறவும்.

No comments:

Post a Comment