Wednesday, October 11, 2017

கேரட் ஹல்வா, CARROT HALWA

கேரட் ஹல்வா

என்ன தேவை?

துருவிய கேரட் – 3 கப்
சக்கரை – 3/4 கப் – 1 கப்
நெய் – 1/4 கப்
பால் – 2 & 1/4 கப் (Can reduce for quick version)
ஏலக்காய் – 1, பொடித்தது
முந்திரி பருப்பு – 5
பிஸ்தா – 5
உப்பு – ஒரு சிட்டிகை

எப்படி செய்வது?

  1. காரட்டை துருவி கொள்ளவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில், 1 மேஜைக்கரண்டி நெய் சேர்த்து, துருவிய கேரட்டை சேர்த்து வதக்கவும்.
  2. நன்கு வதங்கி, பச்சை வாசனை நீங்கியவுடன், பால் சேர்த்து வேக விடவும். நடுவில் கிளறிவிடவும். இல்லாவிடில் அடி பிடித்து விடும்.
  3. தீயை மிதமாக வைக்கவும். பால் பாதி சுண்டியவுடன் தீயை அதிகமாக்கி , கை விடாமல் கிளறினால், பால் விரைவாக சுண்டும். அகலமான வாய் இருக்கும் பாத்திரமாக தேர்ந்தெடுக்கவும்.
  4. பால் சுண்டி, கேரட் வெந்ததும், சக்கரை சேர்த்து கிளறவும்.
  5. நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும். கெட்டியாகும் பொழுது, பொடித்த ஏலக்காய் சேர்த்து கிளறவும்.
  6. ஹல்வா பதம் – ஓரங்களில் ஒட்டாமல் திரண்டு வரும் பொழுது அடுப்பை நிறுத்தி, ஒரு மேஜைக்கரண்டி நெய்யில் முந்திரி பிஸ்தாவை பொன்னிறமாக வறுத்து சேர்க்கவும்.
carrot halwa tamil
  • ஹல்வா வேகும் பொழுது மேலே தேரிக்காமல் பார்த்துக்கொள்ளவும்.
  • நெய் மற்றும் பால், உங்கள் விருப்பத்திற்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம் 

No comments:

Post a Comment