Wednesday, October 11, 2017

எலுமிச்சை ஊறுகாய், ELUMICHAI OORUGAI

இந்த வகை ஊறுகாய், கல்யாண வீடுகளில் செய்யும் ஊறுகாய். எலுமிச்சையை நான்காக கீறி, உப்பு திணித்து, ஓரிரு வரம் கழித்து செய்யும் வகை ஒன்று, இந்த சுலபமான வகை ஒன்று.

என்ன தேவை ?

எலுமிச்சை – 10
காய்ந்த சிகப்பு மிளகாய் – 20
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
வெந்தயம் – 1 தேக்கரண்டி (வறுத்து பொடி செய்யவும்)
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

தாளிக்க

நல்லெண்ணெய் – 2 மேஜைக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி

எப்படி செய்வது?

    1. கத்தியாலோ, அல்லது ஏதாவது கூரான கம்பியாலோ எலுமிச்சையை குத்தி, சிறிது தண்ணீர், பாதி உப்பு சேர்த்து, 2 விசில் வரை வேக விடவும்.instant-lemon-pickle-step-1
    2. ஆறியபின், சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். விதைகளை நறுக்கும் போதே நீக்கிவிடவும்.instant-lemon-pickle-step-2
    3. சிகப்பு மிளகாயை மிக்சியில் பொடியாக்கவும்.instant-lemon-pickle-step-3
    4. வாணலியை சூடாக்கி, எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, பெருங்காயம் சேர்க்கவும். வேகவைத்து நறுக்கிய எலுமிச்சை சேர்க்கவும்.`instant-lemon-pickle-step-4
    5. தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், வெந்தய பொடி சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை கிளறவும்.instant-lemon-pickle-step-5

உங்கள் கவனத்திற்கு

  • கடையில் வாங்கிய மிளகாய் தூள் சேர்ப்பதனால், ஒரு எலுமிச்சைக்கு, ஒரு தேக்கரண்டி விகிதம் சேர்க்கவும். 
  • பொதுவாக, எவ்வளவு மிளகாய் தூள் சேர்கிறோமோ அதே அளவு உப்பு சேர்ப்போம்.
  • சரியாக உப்பு, மிளகாய் சேர்க்கவிட்டால் ஊறுகாய் கசக்கும்.

No comments:

Post a Comment