Thursday, October 12, 2017

கோதுமை அப்பம், GODHUMAI APPAM

கோதுமை அப்பம்

என்ன தேவை?

கோதுமை மாவு – 1 கப்
அரிசி மாவு – 2 மேஜைக்கரண்டி
வெல்லம் – 1/2 கப்
வாழைப்பழம் – 1/2
ஏலக்காய் – 1
சமையல் சோடா – 1 சிட்டிகை
உப்பு – 1 சிட்டிகை
எண்ணெய் அல்லது நெய் – பொறிக்க தேவையான அளவு

எப்படி செய்வது?

    1. பொடி செய்த வெல்லம், மற்றும் அனைத்தையும் (எண்ணெய் தவிர) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து, வடை மாவை  போல கரைத்துக்கொள்ளவும்.எண்ணெய்யை காய வைத்து ஒரு கரண்டி கொண்டு, மாவை எண்ணெய்யில் ஊற்றவும். வெந்து மேலே எழும்பி வரும் பொழுது, திருப்பி விட்டு வேக விடவும். சிவந்ததும் எண்ணெய்யை வடித்து எடுத்துவிடவும்.

உங்கள் கவனத்திற்கு

  • அப்பம் வேகும் பொழுது, தீயை குறைத்து வேக வைக்கவும். இல்லையென்றால், வெளியே சிவந்து, உள்ளே வேகாமல் இருக்கும். 

No comments:

Post a Comment