Wednesday, October 11, 2017

சாமை உப்மா கொழுக்கட்டை, SAMAI UPMA KOZHUKATTAI

சாமை உப்மா கொழுக்கட்டை
சாமை உப்மா கொழுக்கட்டை, அரிசி உப்மா கொழுக்கட்டை போலவே செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. அரிசி உப்மா கொழுக்கட்டை செய்ய, அரிசியை மிக்சியில் ஒன்றிரண்டாக அரைக்க வேண்டும். ஆனால் இதற்கு, நான் பருப்பை மட்டும் அரைத்து சேர்த்துள்ளேன். பொதுவாக நாங்கள் துவரம் பருப்பு தான் உப்மா கொழுக்கட்டை செய்ய உபயோகிப்போம். பயற்றம் பருப்பு எளிதில் வேகும் ஆதலால் இங்கு அதனை உபயோகித்துள்ளேன். 

தேவையான பொருட்கள்

சாமை – 1/2 கப்
பாசி பருப்பு – 1 மேஜைக்கரண்டி
மிளகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
துருவிய தேங்காய் – 2 மேஜைக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப

தாளிக்க

எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 3/4 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
சிகப்பு மிளகாய் – 1
கருவேப்பிலை – 1 கொத்து
பெருங்காயம் – ஒரு சிட்டிகை

செய்முறை

  1. மிக்சியில் பாசி பருப்பு, மிளகு, ஜீரகம் சேர்த்து கரகரப்பாக பிடிக்கவும்.1-powder
  2. கடாயில் எண்ணெய் சேர்த்து, தாளிக்க வேண்டிய பொருட்களை சேர்த்து, 1 & 1/2 கப் தண்ணீர் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.2-temper
  3. பொடித்த பருப்பு, சாமை, துறுவிய தேங்காய் சேர்த்து கிளறவும்.3-add
  4. ஐந்து நிமிடங்கள் மூடி வைத்து வேக வைத்து இறக்கவும்.4-cook
  5. ஆறியபின், உருண்டைகளாக பிடித்து, இட்லி தட்டில் எண்ணெய் தடவி, அதன் மேல் வைத்து 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.5-steam
சாம்பார் அல்லது சட்னியுடன் சேர்த்து பரிமாறவும்.

No comments:

Post a Comment