Wednesday, October 11, 2017

வேர்கடலை சுண்டல், VERKADALAI SUNDAL

வேர்கடலை சுண்டல்
வேர்க்கடலை சுண்டல் செய்முறை. ஒவ்வொரு குறிப்பிற்கும் படங்களுடன். எளிதில் செய்யக்கூடிய சுண்டல் வகைகளுள் ஒன்று. இரவே ஊறவைக்கும் வேலை இல்லை.
காய்ந்த வேர்க்கடலை கிடைப்பதால், இதனை ஊறவைத்து செய்வது மிகவும் எளிது. என்னை பொறுத்தவரையில் இது எனக்கு மிகவும் பிடித்த சுண்டலாகும். ஒரு தோழியின் வீட்டில் சாப்பிட்டவுடன் எனக்கு, இது மிகவும் பிடித்துவிட்டது. எளிய பொருட்கள் தான் ஆனால் மிகவும் சுவையானதும் சத்தானதும்  கூட.
நவராத்ரி வேளையில் இந்த சுண்டல் ஒருநாள் என் வீட்டில் கண்டிப்பாக இடம் பெரும். இந்த வருட நவராத்ரி இன்னும் சில நாட்களில் வர இருப்பதால், நவராத்ரி ஸ்பெஷல் ரெசிபிக்கள் போடலாம் என இதனை சுண்டல் வகைகளோடு சேர்க்கலாம் என்று பதிவிடுகிறேன்.
 தேவையான பொருட்கள் 
வேர்கடலை (காய்ந்தது) – 1 கப்
துருவிய தேங்காய் – 1/4 கப்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க 
எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – 3/4 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
சிகப்பு மிளகாய் – 2
பெருங்காயம் – 2 சிட்டிகை
கருவேப்பிலை – ஒரு கொத்து

வேர்கடலை சுண்டல்செய்முறை :

  1. வேர்கடலையை ஓரிரு மணி நேரங்கள் ஊறவைக்கவும். தண்ணீரை வடித்து, 3/4 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, 3 விசில் வரும் வரை குக்கரில் வேகவிடவும்.sundal-1
  2. ஒரு கடையில் எண்ணெய் சேர்த்து, தாளிக்க வேண்டிய பொருட்களை சேர்த்து, வேகவைத்த வேர்கடலையை, தண்ணீரை வடித்து சேர்க்கவும்.sundal-2
  3. ஒரு நிமிடம் வதக்கி, துருவிய தேங்காய் சேர்த்து, மேலும் ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும்.sundal-3
குறிப்பு
  • பச்சை வேர்கடலையாக இருப்பின் ஊறவைக்க வேண்டாம். தாளிக்கும் பொழுது, பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து தாளிக்கலாம். தேங்காய், இஞ்சியை, கரகரப்பாக அரைத்தும் சேர்க்கலாம்.

1 comment:

  1. Yummy Snack Recipe. I found another snack Corn Kebab Recipe its too Delicious

    ReplyDelete