Thursday, October 12, 2017

அரைத்துவிட்ட சாம்பார் (ARACHUVITTA SAMBAR)

அரைத்துவிட்ட சாம்பார்
அரைத்துவிட்ட சாம்பார், எனக்கு மிகவும் பிடித்த சாம்பார். தேங்காய் சேர்த்து முதல் முறை சாதத்தோடு சேர்த்து சாப்பிட செய்தென். கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு எப்படி இருந்தது என்று சொல்லவும் 🙂

சாம்பார் எப்படி செய்வது என்பதை படங்களுடன் கீழ விளக்கியுள்ளேன் 

அரைத்துவிட்ட சாம்பார் செய்முறை 

  1. துவரம்பருப்பை 1 & 1/2 கப் தண்ணீர் சேர்த்து, புளியையும் சிறு பாத்திரத்தில் அதன் நடுவே வைத்து, 4-5 விசில்கள், மிதமான தீயில் வேக வைக்கவும். வெந்ததும், பருப்பை, நன்கு குழைக்கவும். புளியை தண்ணீர் சேர்த்து, கரைத்துக்கொள்ளவும். (1 கப்)
  2. step-1-அரைத்துவிட்ட சாம்பார்
  3. 3 கப் தண்ணீரில், முருங்கைக்காய்(சிறிய துண்டுகளாக வெட்டவும்), முள்ளங்கி, காரட் (வட்டமாக நறுக்கவும்), அவரைக்காய் ஆகியவற்றை வேகவிடவும்.
  4. step-2-sambar-recipe
  5. இதற்கிடையே, வாணலியில் நெய் சேர்த்து, சிகப்பு காய்ந்த மிளகாய் , உளுத்தம் பருப்பு, தனியா, வெந்தயம், பெருங்காயம் ஆகியவற்றை மிதமான தீயில், பொன்னிறமாக வறுக்கவும்
  6. step-3-sambar
  7. வறுபட்டவுடன், தேங்காய் சேர்த்து, பொன்னிறமாக வறுக்கவும். ஒரு தட்டில் பரப்பி,ஆறவைக்கவும்.
  8. step-4-sambar
  9. வாணலியில் எண்ணெய் சேர்த்து, கடுகு சீரகம் சேர்த்து, தாளிக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஒன்றாக சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
  10. step-5-sambar-recipe
  11. இதனை, கொதிக்கும் காய்கறிகளோடு சேர்க்கவும். காய் வெந்தவுடன், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, புலி கரைசல் சேர்த்து கொதிக்கவிடவும்.
  12. step-6-sambar-recipe
  13. கத்தரிக்காய், பரங்கிக்காய் எளிதில் வெந்துவிடும் காய்கள் என்பதால், இந்த நிலையில் ஏறத்தாழ போதும்.  பருப்பையும் சேர்த்து, தண்ணீர் தேவைப்பட்டால் சேர்த்து, கொதிக்க விடவும்.
  14. step-7-sambar-recipe
  15. வறுத்த பொருட்களை, சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  16. step-8-sambar-recipe
  17. கொதிக்கும் சாம்பாரில் சேர்த்து, 3-4 நிமிடம் வரை கொதிக்க விடவும். கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
  18. step-9-sambar

No comments:

Post a Comment