Thursday, October 12, 2017

உளுந்து வடை, ULUNDU VADAI

உளுந்து வடை மிக்சியில் அரைப்பதை விட, கிரைண்டரில் அரைத்தால், சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்கும். மிக்சியில் அரைக்கவேண்டும் என்றால், 3 மணிநேரம் ஊறியபின், 30 நிமிடங்கள் பிரிட்ஜில் வைத்து, ஐஸ் வாட்டர் ஊற்றி அரைத்தால், நன்றாக வரும். பண்டிகை நாட்களில், வெங்காயம் சேர்க்காமல் செய்வது வழக்கம். அதற்கு பதிலாக, கருப்பு மிளகை, ஒன்றிரண்டாக பொடி செய்து சேர்க்கலாம்.
உளுந்தின் தரத்திற்கு ஏற்றாற்போல் வடையின் எண்ணிக்கை மாறும்.

உளுந்து வடை – மெது வடை
(15 சிறிய வடைகள் செய்ய)
என்ன தேவை?

வெள்ளை உளுந்து – 3/4 கப்
சின்ன வெங்காயம் – 10
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது – 2 மேஜைக்கரண்டி
பெருங்காயம் – 3 சிட்டிகை
கருவேப்பிலை – 1 ஆர்க்கு
எண்ணெய் – பொறிக்க

எப்படி செய்வது?

  1. உளுந்தை, 3 மணி நேரம் ஊறவைக்கவும்.தண்ணீரை வடித்து, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து, குளிர்ந்த நீரை சிறிது சிறிதாக ஊற்றி அரைக்கவும்.
  2.  
  3. அரைக்கும் பொழுது, அருகிலே நின்று, ஓரங்களை வழித்து விடுதல் வேண்டும். வழு வழுப்பான மாவாக அரைபட்டவுடன், வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை மூன்றையும் பொடியாக நறுக்கி சேர்க்கவும்.உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு கலந்து  கொள்ளவும்.
  4. கடாயில் எண்ணெய் காய வைக்கவும்.
  5. வடை மாவு கெட்டியாக இருக்க வேண்டும். கைகளில் தண்ணீர் தடவி, ஒரு பெரிய எலுமிச்சை அளவு மாவை எடுத்து உருட்டி,  கட்டை விரலால் ஓட்டையிட்டு, எண்ணெய்யில் கவனமாக போடவும்.
  6. எண்ணெய் அளவிற்கு ஏற்றபடி 3-4 ஒரே சட்டியில் பொரித்து எடுக்கலாம்.
  7. பொன்னிறமாக ஒரு புறம் சிவந்ததும், மறுபுறம் திருப்பிவிட்டு, பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். தீயை அவ்வப்பொழுது குறைத்து, எண்ணெய் புகையாமல் பார்த்துக்கொள்ளவும். 
வெங்காயம் சேர்க்காமல், உப்பு போடாமல் மாவை ஒரு காற்றுபுகா டப்பாவில் போட்டு, பிரிட்ஜில் வைத்துக்கொண்டால், மறுநாள் கூட உபயோகிக்கலாம்.

No comments:

Post a Comment