Thursday, October 12, 2017

கடலை உருண்டை, KADALAI URUNDAI

6-roll

என்ன தேவை?

வேர் கடலை (காய்ந்தது) – 1 கப்
வெல்லம் – 1/2 கப்
தண்ணீர் – 1/2 கப்
நெய் – தேவைக்கேற்ப

எப்படி செய்வது?

    1. ஓர் அடி கனமான பாத்திரத்தில், வேர்க்கடலையை மிதமான தீயில் வறுத்துக்கொள்ளவும். ஆறவைத்து, நன்கு உள்ளங்கைகளால் தேய்த்து, தோலை முற்றிலுமாக நீக்கி விடவும்.1-roast
    2. ஒரு அடி கனமான பாத்திரத்தில், வெல்லம், தண்ணீர் சேர்த்து, வெல்லத்தை கரைக்கவும்.2-syrup
    3. கரைந்ததும் வடிகட்டவும். மீண்டும் பாத்திரத்தை நன்கு கழுவி விட்டு, வெல்ல பாகை காய்ச்சவும்.3-syrup
    4. ஒரு சிறு கிண்ணத்தில் தண்ணீர் வைத்து, பாகு பதம் வந்து விட்டதா என்று பார்க்கவும். சிறு துளிகளை ஊற்றி, விரல்களால் உருட்ட முடிய வேண்டும். உருட்டிய உருண்டை, பளபளப்பாகவும், தட்டில் போட்டால் சாதத்துடனும் விழும். இது தன் சரியான உருட்டு பதம்.4-test
    5. அடுப்பிலிருந்து இறக்கி, வேர்க்கடலையை சேர்க்கவும். ஒரு கரண்டி காம்பினால் கிளறவும்.5-add
    6. கையில் நெய் தடவிக்கொண்டு, சிறிது சிறிதாக எடுத்து, உருண்டைகளாக, கெட்டியாக உருட்டவும்.6-roll
இறுதியில் பாத்திரத்தில் கலவை கெட்டியாகும் பொழுது, லேசாக அடுப்பில் வைத்து சூடு செய்தல் இளகிவிடும், மீண்டும் உருட்டிவிடலாம்.

No comments:

Post a Comment